- சூரசம்ஹார விழா நடந்தது.
- உற்சவருக்கு தீபாரதி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.
மதுரை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள திருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ் டியை முன்னிட்டு சூர பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழாவானது அனைத்து சிவாலயங்க ளிலும், முருகப்பெருமான் கோவில்களிலும் நடைபெறு வது வழக்கம். சூரனை வதம் செய்து அசுரர்களிடம் இருந்து தேவர்களை காப்பதே சூரசம்ஹாரம் ஆகும்.
அந்த வகையில் திருச்சுழி பூமிநாதன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாள் நடை பெறும் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி யில் முருக பெருமான் சூரனை வதம் செய்தார்.முன்னதாக கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக முருகப்பெரு மான் அம்பிகையிடம் இருந்து சக்தி ஆயுதமான வேலாயுதம் பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனையடுத்து நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சோழ வந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12-ம் ஆண்டு சூரசம்ஹார விழா நேற்று மாலை கோவில் முன்பு நடை பெற்றது. பக்தர்கள் வெற்றி வேல்முருகா, வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டியினர் செய்து வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன்-வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனிடம் இருந்து பூஜிக்கப்பட்ட வேல் வழங்கப்பட்டது. அங்கு சூரன் ஆடு, யானை, சிம்மம் வடிவில் உருமாறி காட்சி அளிக்க முருகன் சூரனை வதம் செய்தார். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் உற்சவருக்கு தீபாரதி காண்பி க்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.