உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் கஞ்சா கடத்தல்

Published On 2023-01-25 08:53 GMT   |   Update On 2023-01-25 09:00 GMT
  • மோட்டார் சைக்கிளில் 21 கிலோ கஞ்சாவை வாலிபர்கள் கடத்தினர்.
  • நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

மதுரை

மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரநாயர் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீ சார் ரோந்து சென்றனர். கூடல்நகர், ெரயில் தண்டவாளம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்த இருவரிடம் விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் 21 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர்கள் அருள் தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு நாய்போடு கணேசன் மகன் ஹரிஹரன் (22), சோழவந்தான் அருகில் உள்ள ஊத்துக்குளி ரமேஷ் மகன் விஜயேந்திரன்(23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.

மதுரை புது ஜெயில் ரோடு வெள்ளை அம்மன் கோவில் அருகே 30 கிராம் கஞ்சாவுடன் முரட்டன்பத்ரி ரஞ்சித்குமார் (25) என்பவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News