உள்ளூர் செய்திகள்

மதுரையில் 2 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த காட்சி. அருகில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், வெங்கடேசன் எம்.பி., கலெக்டர் சங்கீதா, தளபதி எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

உயர்மட்ட பாலம் கட்ட முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Published On 2023-10-30 07:28 GMT   |   Update On 2023-10-30 07:28 GMT
  • ரூ.306 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
  • இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் னில் நடைபெற்ற முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வ தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். இன்று காலை கோரிப்பாளையம் சந்திப் பில் பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

அதன்பின்னர் மதுரை மேலமடை சந்திப்பு பகுதியி ல் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண் டார். இதில் கோரிப்பாளை யம் சந்திப்பில் அமைய உள்ள மேம்பாலம், மேல மடை சந்திப்பில் அமைய உள்ள உயர்மட்ட பாலம் ஆகிய 2 பாலங்கள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மதுரையின் மிக முக்கிய கோரிப்பாளையம் சந்திப் பில் பாலம் கட்டுவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. இருப்பினும் தற்போது தான் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

குறிப்பாக மதுரை மாநக ரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்கு வரத்து நெரிசலை கட்டுப்ப டுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வா கமும் மேற்கொண்டு வரு கின்றனர்.

அந்த வகையில் மதுரை யில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக கோரிப்பா ளையம், அண்ணா பஸ் நிலைய பகுதிகள் உள்ளன. இந்த சாலைகளில் சாதாரண நேரங்களில் கூட போக்கு வரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கோரிப் பாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள் ளது. இந்த பாலத்தை 2 கி.மீ. நீளத்துக்கு அமைக்க திட்டமி டப்பட்டிருந்தது. சித்திரை திருவிழாவின் போது அழ கர் எழுந்தருளும் திருக்கண் மண்டபகாரர்கள் எதிர்ப்பை அடுத்து நீளம் 1.3 கி.மீ. ஆக குறைக்கபட்டுள்ளது.

பாலத்திற்கு அடியில் சென்று பீ.பி.குளம் செல் லும் வகையில் அமைப்பு இருக்கும் என தெரிகிறது. மேலும் 5 பகுதிகளை இணைக்கும் வகையில் பால மானது அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற் கேற்ற வகையில் கோரிப்பா ளையம், அண்ணா சிலை, யானைக்கல், பீ.பி.குளம், தல்லாகுளம் ஆகிய 5 சந் திப்புகள் விரிவாக்கம் செய் யப்பட உள்ளன.

கோரிப்பாளையம் சந்திப் பில் அமைய உள்ள பாலத் தின் நீளம் குறைக்கப்பட்ட தையடுத்து பாலத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.172 கோடி யில் இருந்து ரூ.156 கோடி யாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரி-சிவகங்கை சாலையில் அண்ணா பஸ் நிலையம் முதல் மேலமடை சந்திப்பு வரையிலான 2.5 கி.மீ. தூரத் துக்கு போக்குவரத்து நெரி சல் அதிகமாக உள்ளது.

அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக் னல்களில் சந்திக்கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட் டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.

இதனால் அண்ணா பஸ் நிலையம், ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சந்திப் புகளிலும், அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சீரான போக்குவரத்து வச தியை ஏற்படுத்துவதற்கா கவும் ஆவின் முதல் கோமதிபுரம் 6-வது மெயின் ரோடு வரையில் 1.1 கி.மீ. தூரத்துக்கு ரூ.150.28 கோடி யில் உயர் மட்டப் பாலம் அமைக்கவும், 3 சந்திப்பு பகுதிகளையும் அகலப் படுத்தவும் நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள் ளனர்.

இதற்காக நிலம் கைய கப்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த் துறையி னர் நிறைவு செய்து விட்ட தாகவும் தகவல்கள் தெரிய வருகிறது. அத்துடன் மேல மடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா பஸ் நிலையம், ஆவின், ேமலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News