உள்ளூர் செய்திகள்

இ-சேவை மையம் அமைப்பவர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர் உள்பட பலர் உள்ளனர்.

இ-சேவை மையம் 13 ஆயிரம் பேருக்கு அனுமதி

Published On 2023-05-21 09:07 GMT   |   Update On 2023-05-21 09:07 GMT
  • மதுைர மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க 13 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
  • மண்டலத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், கலெக்டர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம், மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மிசா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News