9 பேர் பலியான சம்பவம் மனதுக்கு வேதனை அளிக்கிறது
- மதுரையில் 9 பேர் பலியான சம்பவம் மனதுக்கு வேதனை அளிக்கிறது.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வ தற்காக 90 க்கும் மேற்பட்டோர் கடந்த 17 தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட் டிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.
இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டபோது, திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தால் 9-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தீக் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோரச்சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீ விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் மரணமடைந்த பக்தர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.