மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு அறிக்கை தயாரிக்கும் பணி மும்முரம்
- மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு அறிக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
- 75 நாட்களுக்குள் தயாரித்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மதுரை
தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ெரயில் சேவைகளை தொடங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் மதுரை யில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு, 18 ெரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் ஒரு நிறுவனத்துக்கு 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இது தொடர்பாக மதுரை மாவட்டம் முழுவதி லும் ஆய்வு நடத்தினார்கள்.
இதன் அடிப்படையில் மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதற்கிடையே மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகராக இன்னொரு பொறியியல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.