கேனுடன் பெரியார் பஸ் நிலையத்தை சுற்றிய மர்ம வாலிபரால் பரபரப்பு
- பெரியார் பஸ் நிலையத்தில் கேனுடன் சுற்றிய மர்ம வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
- கூடுதலாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.
மதுரை
தூங்கா நகரமான மதுரைக்கு 24 மணி நேரமும் வெளியூர், உள்ளூர் மக்கள் வந்து செல்வார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ப தால் வெளியூர் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதிகாலை 2.30 மணி அளவில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இரவு நேர பஸ்களில் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பெரியார் பஸ் நிலையத்தில் அதிகாலை 3 மணி அளவில் திருமங்கலம் செல்லும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆரப் பாளையம், மாட்டுத்தாவணி ஆகிய இடங்களுக்கு ஓரளவு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் திருமங்கலத்துக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
சித்திரை திருவிழாவை யொட்டி இரவு நேரத்தில் மாட்டுத்தாவணியில் இருந்து திருப்பரங்குன்றத் துக்கு பஸ்கள் இயக்கப்பட் டன. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் பயணி கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது பெரியார் பஸ் நிலையத்தில் திருமங்க லம் பஸ் நிலையத்துக்கு காத்திருந்தால் ஒரு மணி நேத்திற்கு ஒரு பஸ்தான் வருகிறது. அதுவும் சில நாட்களில் செயல்படுவ தில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாட்டுத்தாவணியில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வந்த பயணிகள் திருமங்கலம் பஸ்சுக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
அதிகாலை 3 மணிய ளவில் மேல்சட்டை அணி யாத வாலிபர் ஒருவர் ஒரு கேனை தோளில் வைத்தபடி பஸ் நிலையத்தை பலமுறை சுற்றி வந்தார். அந்த கேனில் ஏதோ ஒரு திரவம் இருந்தது. அது பெட்ரோலா? மண் எண்ணையா,? தண்ணீரா? என்று தெரியவில்லை. அந்த வாலிபர் குடிபோதை யில் இருந்ததாக தெரிகிறது. அவரது உடலில் திரவம் சிந்தி இருந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்ட வரா? என்றும் சந்தேகம் எழுந்தது. இந்த வேளையில் பெரியார் பஸ் நிலை யத்தில் போலீஸ் வாகனம் இருந்த போதிலும் போலீசாரை காணவில்லை. அவர்கள் வேறு பகுதிக்கு ரோந்து சென்று விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே கேனுடன் சுற்றிய வாலிபர் தீக்குளிப்ப தற்காக இப்படி செல்கி றாரா? என்று பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனை கவனித்து நட வடிக்கை எடுக்க போலீசார் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். எனவே பெரியார் பஸ் நிலையத்தில் 24 மணி நேர மும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தால் தான் சமூக விரோதிகள் அங்கு வரு வதை தவிர்ப்பார்கள் என்று பயணிகள் தெரிவித்தனர்.
மேலும் இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் திருமங்க லத்தில் பயணிகளை இறக்கி விட்டு ரிங் ரோடு வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்கின்றன.
திருமங்கலத்தில் நள்ளி ரவு நேரத்தில் இறங்கும் பயணிகள் அங்கிருந்து பெரி யார் மற்றும் ஆரப்பாளையம் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கைக்குழந்தை களுடன் பெண்கள் பஸ்சில் நின்றபடி பயணிக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது. எனவே நள்ளிரவு நேரத்தில் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்துக்கு அதிக மான பஸ்களை இயக்க வேண்டும்.
இரவு நேரத்தில் திருப்ப ரங்குன்றம், திருமங்கலம் பஸ்கள் கிடைக்காமல் தவிக்கும் பயணிகள் ஆரப்பாளையம் சென்று திருமங்கலம் பஸ்சை பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ள தால் கூடுதலாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.