உள்ளூர் செய்திகள்

பழங்காநத்தம் பகுதியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

பசுமலை முதல் பழங்காநத்தம் வரை கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-06-29 10:05 GMT   |   Update On 2023-06-29 10:05 GMT
  • பசுமலை முதல் பழங்காநத்தம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

மதுரை

மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல் கபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் இருந்து 125 எம்.எல்.டி.குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப் பட்டு வைகை அணை அருகே உள்ள பண்ணை பட்டியில் சுத்திகரிக்கப்பட உள்ளது. பின்னர் அங்கி ருந்து மதுரை நகருக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மதுரை நகரில் தற்போது நடை பெற்று வருகின்றன.

அதன்படி திருப்ப ரங்குன்றம் அருகே யுள்ள மூலக்கரையில் இருந்து பழங்காநத்தம் வரை முதற்கட்டமாக பூமிக்கடி யில் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இதற்காக மூலக்கரை -பழங்காநத்தம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இரவு, பகலாக பள்ளம் ேதாண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடக்கி றது. ஆனால் இந்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் எந்த வித முன்னேற்பாடு நட வடிக்கைகளும் எடுக்க வில்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் சாலை யில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இந்தநிலையில் இன்று காலை குடிநீர் திட்டப்பணி களால் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், பசுமலை, மூலக்கரை, பைக்காரா, வசந்தநகர் ஆகிய பகுதி களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ், லாரிகள், கார், ஆட்டோ போன்றவை இருபுறமும் அணிவகுத்து நின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்றதை காண முடிந்தது. காலை 9 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதனால் இந்த மார்க்கத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் கடும் அவதியடைந்தனர். அவசர வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள் ஆகியோர் கடும் அவதி யடைந்தனர். போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை. மாறாக போக்குவரத்து பாதிப்பு அதிகமானது.

இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக குடிநீர் திட்டப்பணிகள் திருப்ப ரங்குன்றம் சாலையில் நடந்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாளில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.

இனி வரும் நாட்களி லாவது மேற்கண்ட பணி களை இரவில் மேற்கொள்ள வேண்டும். போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News