பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது
- பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது செய்யப்பட்டார்.
- கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது60). இவர் ஆழ்வார்புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு தனது பேத்தியுடன் சென்றி ருந்தார். அவர் 3-வது தளத்திற்கு சென்று துணி வாங்கிக் கொண்டிருந்த ார். அப்போது அவருடன் சென்ற பேத்தியை காண வில்லை.
தேடி பார்த்தபோது அந்த தளத்தின் படிக்கட்டு பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது பார்த்தபோது அவர் அணிந்திருந்த ½ பவுன் வளையல் திருடு போயிருந்தது தெரியவந்தது. குழந்தையை நைசாக தூக்கிச் சென்று படிக்கட்டில் வைத்து மர்ம நபர் வளை யலை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜவுளி கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதனடிப்படையில் அந்த முதியவரை போலீசார் தேடி வந்தனர். அவர் மதுரை தாசில்தார் நகர் நேரு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், அவர் வேறு சில ஜவுளிக்கடைகளிலும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4½ பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி (63). இவர் தன் பேத்தியுடன் மாட்டுத்தா வணியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு துணிகள் வாங்க சென்றிருந்தார்.அப்போது அவருடைய பேத்தி அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் மற்றும் செயின் காணாமல் போனது.
இதுகுறித்து துரைசாமி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டத்தில் யாரும் குழந்தையிடம் திருடினார்களா? அல்லது மாயமானதா? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.