உள்ளூர் செய்திகள்

ஆர்.பி.உதயகுமார்

டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பால் இளைஞர்கள் ஏமாற்றம்; ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Published On 2022-12-26 08:06 GMT   |   Update On 2022-12-26 08:06 GMT
  • டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
  • குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னு ரிமை வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இந்த 18 மாத காலத்திலே எத்தனை பேர்களுக்கு வேலைகள் வழங்கி இருக்கிறது. 74 லட்சம் பேர் அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

கடந்து சில மாதங்க ளுக்கு முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு இது வரை இல்லாத வகை யில் 21, 85,328 பேர் விண்ணப்பித்தி ருக்கிறார்கள். அப்படி எதிர்பார்த்து காத்திருக்கிற பலருக்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய குரூப்-2, குரூப்- 3 பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாததும், குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குரூப்-1 தேர்வில் எத்தனை காலி இடங்கள் என்ற விவ ரங்கள் இல்லாததும் இளை ஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் 5.50 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்று சொன்னது கானல் நீராகத்தான் உள்ளது. எனவே கடந்த 18 மாதத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News