- முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றப்படும்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மதுரை
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல கத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதை யொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி நாளை விழா நடைபெறும் நத்தம் சாலை யில் ஐ.ஓ.சி. ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. இப்பகுதிக்கு ஐ.ஓ.சி. ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமைரைத்தொட்டி, புதூர், மூன்றுமாவடி வழியாக ஐயர்பங்களா சந்திப்பு சென்று தங்கள் பகுதிக்கு செல்லலாம். அதுபோல நத்தம் ரோட்டிலிருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள் மூன்று மாவடி, புதூர் வழியாக நகரின் உட்பகுதிக்கு செல்லலாம். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பி லிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர் வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லவேண்டும். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.
அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வளையங்குளம், சாம நத்தம், பொட்ட பாளையம் மற்றும் கீழடி வழியாக ராமேசுவரம் சாலையினை மாட்டுத் தாவணி செல்லவேண்டும்.
தூத்துக்குடி, அருப்புக் கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு கனரக வாகனங்களும் கப்பலூர் செல்லவேண்டும். சென்று திண்டுக்கல் சாலை வழியாக செல்லவேண்டும்.
எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் வாகன கொள்ளப் படுகிறது.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.