மதுரை பனகல் சாலையில் போக்குவரத்து மாற்றம்
- மதுரை பனகல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.
மதுரை
மதுரை மாநகரில் நாள்தோறும் பெருகிவரும் வாகன நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆவின் சந்திப்பு சாலை, வெளிமாவட்டத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக உள்ளது. அதேபோல பள்ளி-கல்லூரி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது.
ஆவின் சந்திப்பு முதல் திருவள்ளுவர் சிலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் திரளானோர் 2 மற்றும் 4 சக்கர வாக னங்களில் வந்து செல்கின்றனர். இதனால் வள்ளுவர் சிலை சந்திப்பிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
திருவள்ளுவர் சிலை முதல் ஆவின் ரோடு வரை செல்லும் சாலை குறுகலாக உள்ளது. அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்படு கிறது. மேலும் இந்த சாலை அமைப்பானது போக்கு வரத்து சிக்னல் அமைக்க முடியாத வகையில் உள்ளது. இதன் காரணமாக போலீ சாரால் இந்த சந்திப்பில் போக்குவரத்தை எளிதாக கையாள முடியவில்லை.
அந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப் பட்டிருந்தது. அது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்ப டையில் ஆவின் சந்திப்பில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
இந்த சாலையில் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆவின் சந்திப்பில் இருந்து திரு வள்ளுவர் சிலை சந்திப்பு வரை உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
இந்த சாலையில் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்லலாம். ஆவின் சந்திப்பில் இருந்து வள்ளுவர் சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கே.கே. நகர் மேலமடையில் இருந்து ஆவின் வழியாக திருவள்ளுவர் சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குருவிக்காரன் 2-வது சாலை, காந்தி வீதி ராஜேசுவரி ஓட்டல் மற்றும் திருவள்ளுவர் சிலை சந்திப்பு வழியாக பனகல் சாலைக்கு வேண்டும்.
குருவிக்காரன்சாலை 2-வது சாலை ஒரு வழிப்பா தையாக மாற்றப்பட்டது. காந்தி வீதியில் இருந்து குருவிக்காரன் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கே.கே. நகர் மேல மடையில் இருந்து ஆவின் சந்திப்பு வழியாக செல்லும் பஸ்கள் குருவிக்காரன் சாலை 2-வது தெரு, சினிப்பிரியா தியேட்டர் வழியாக ராஜேசுவரி ஓட்டல் சென்று, சுப்புராமன் தெருவின் இடதுபுறம் திரும்பி அண்ணா பஸ் நிலையம் வழியாக சுப்புராமன் தெருவின் வடக்குத்தெரு வழியாக பனகல் சாலைக்கு செல்ல வேண்டும். இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
பனகல் சாலை, சுப்புராமன் தெரு வழியாக அண்ணா சாலையில் இருந்து வடக்குத்தெரு, அண்ணா பஸ் நிலையம் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர்சிலை சந்திப்பில் உள்ள கோரிப்பாளையம் நோக்கி செல்லும் பஸ்களின் நிறுத்தம் அகற்றப்படுகிறது.
மதுரை பனகல் சாலையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.