உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்கள். 

மதுரையில் சித்த மருத்துவமனைகள் சார்பில் பயிற்சி பட்டறை

Published On 2023-02-21 09:51 GMT   |   Update On 2023-02-21 09:51 GMT
  • மதுரையில் சித்த மருத்துவமனைகள் சார்பில் பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது.
  • வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

மதுரை

மதுரையில் மடீட் ஷியா மற்றும் சித்த மருத்துவமனைகள், கிளீனிக் சங்கம் இணைந்து பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவமனை மற்றும் கிளீனிக் சங்கத்தலைவர் ஜெ.ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். மடீட்சியா தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், சித்த மருந்து நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கிளஸ்டர் என்ற அமைப்பை ஏற்படுத்த மடீட்சியா முயற்சி செய்து வருகிறது. ஆயுஷ் தொழில்துறை வளர்ச்சிக்கு மடீட்சியா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளது என்றார்.

திரவியம் ஏற்றுமதி நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி பாஸ்டின் மதிப்புக்கூட்டிய மூலிகை உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் விதம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஷியாம் நாராயணன், வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

ஆதித்யா தொழிற் பயிற்சி தலைவர் செல்வ சுந்தர்ராஜன் நாட்டு மருந்துகளை பதிவு செய்தல், விற்பனை செய்தல் குறித்தும், மானியம், வங்கி கடன் குறித்தும் பேசினார்.

சித்த மருத்துவமனைகள் சங்க பொருளாளர் மணிகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News