உள்ளூர் செய்திகள்

தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வலியுறுத்தல்

Published On 2023-06-20 09:46 GMT   |   Update On 2023-06-20 09:46 GMT
  • தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.
  • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

சென்னையில் கொட்டி தீர்த்த மழையில் ஒரே நாளில் தலைநகர் சென்னை தத்தளிக்கிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில், அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 160 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

மேலும் வரும் 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கடலூர், கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்ற ஒரு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது.

கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜூன் மாதத்தில் சென்னையிலே அதிக பட்சமாக மழைபதிவாகி இருப்பதால், 2 நாட்களாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டி ருக்கிறது.

சென்னை புறநகர் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். சில இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடந்தன. அதே போன்று நங்கநல்லூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

வேப்பேரி, பெரம்பூர், கோயம்பேடு, திருமங்கலம், கத்திபாரா மேம்பாலம், கணேசபுரம் சுரங்க பாதை என பல்வேறு முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமி ழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 4 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பருவ மழைகாலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடன டியாக சீர்படுத்துவதற்கும், பொறுப்பு அதிகாரிகளாக அனுபவம் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, கள ஆய்வுகளை நடத்தி நடவ டிக்கைகளை மேற்கொள் வார்கள்.

தற்போது தி.மு.க. ஆட்சியில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், தென்மேற்கு பருவ மழை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது போன்ற காலங்களில் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.

ரூ.12 கோடியில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு திருவாரூரில் முகாமிட்டுள்ள முதல்-அமைச்சர், மக்களுக்கு கடமைகளை செய்ய வேண்டாமா? அப்படி நீங்கள் மக்களுக்கு பணி செய்தால் உங்களை வரவேற்பார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News