உள்ளூர் செய்திகள்
- அலங்காநல்லூர் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
- மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முகாமை தொடங்கி வைத்தார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொது மேலாளர் சாந்தி வரவேற்றார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜகுமார், துணைப் பதிவாளர் பால்வளம் செல்வம், உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர். சிறந்த பசுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.