உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் கணேசன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

Published On 2023-05-25 08:59 GMT   |   Update On 2023-05-25 08:59 GMT
  • ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்கள் பயனாளிகளை முழுமை யாக சென்ற டையவில்லை.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரி யத்தலைவர் பொன்குமார், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழி லாளர்கள் என மொத்தம் 362 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த அரசு பொறுப்பு வகித்த 10 ஆண்டுகால ஆட்சியில் தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்கள் பயனாளிகளை முழுமை யாக சென்ற டையவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ஏதும் உயர்த்தி வழங்கப்பட வில்லை. முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற வுடன் ஏறத்தாழ 1 லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக் கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிலுவையில் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நலத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட பயனாளி களுக்கு உடனடியாக சென்றடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் சம்பந்தப்பட்ட பயனாளி களுக்கு முழுமை யாக சென்றடைய இந்த திராவிட மாடல் அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News