- திருச்சி கல்யாணராமனின் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு மதுரையில் இன்று தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.
மதுரை
காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 130-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மதுரை ஆண்டாள்புரம் விஸ்வாஸ் கருத்தரங்க கூடத்தில் கலைமாமணி திருச்சி கல்யாண ராமனின் வில்லி பாரத தொடர் சொற்பொழிவு இன்று தொடங்குகிறது.
வருகிற 9-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த சொற்பொழிவு நடக்கிறது இன்று (வியாழன்) அர்ஜுனன் தீர்த்த யாத்திரை என்ற தலைப்பிலும், நாளை (2-ந்தேதி) திரவுபதி மானம் காத்தல், 3-ந்தேதி நளச் சரித்திரம், 4-ந்தேதி அர்ஜுனன் தவம், 5-ந்தேதி நச்சு பொய்கை, 6-ந்தேதி கிருஷ்ணன் தூது, 7-ந்தேதி குந்தியும் கர்ணனும், 8-ந்தேதி கீதையில் கண்ணன் என்ற தலைப்பி லும், 9-ந்தேதி நிறைவு நாள் அன்று கர்ணன் மோட்சம் தர்மர் பட்டாபிஷேகம் என்ற தலைப்பிலும் திருச்சி கல்யாணராமன் உரையாற்று கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.