மதுரை யானை மலை மீது ஏறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுரை யானை மலை மீது ஏறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து கீழே இறங்க செய்தனர்.
மேலூர்
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறை–யாக வெடித்து பெரும் கலவரமாக மாறியுள்ளது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மணிப்பூரில் இரண்டு இளம்பெண்களை நிர்வாணமாகி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், மணிப்பூரில் கலவரத்தை அடக்கி அமைதியை நிலை–நாட்டவும் வலியுறுத்தி மதுரை மேலூர் ஒத்தக்கடை அருகே போராட்டம் நடை–பெற்றது.
எவர்சில்வர் தொழிலா–ளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் நரசிங்கம் பட்டி யானை மலை மீது ஏறி மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இந்த போராட்டத்தில் எவர்சில்வர் தொழிலாளர் கள் சங்க தலைவர் சரவ–ணன், செயலாளர் மலைக் கள்ளன், நிர்வாகிகள் பெரு–மாள், அழகர், கண்ணன், பாண்டியராஜன், கமல் உள் பட ஏராளமானோர் சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட–னர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சூர்யா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து கீழே இறங்க செய்தனர்.