உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ சக்தி வாராகி சித்தர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.


விளாத்திகுளம் ஸ்ரீ சக்தி வாராகி சித்தர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

Published On 2022-10-10 09:00 GMT   |   Update On 2022-10-10 09:00 GMT
  • ஸ்ரீ சக்தி வாராகி சித்தர் கோவில் மகா கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
  • யாகத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் போலீஸ் லைன் 2-வது தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி வாராகி சித்தர் கோவில் மகா கும்பாபிஷேகம் காலை 6 மணி அளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாராகி அம்மனுக்கு தீபாராதனைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், சக்தி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

மேலும் கணவன்- மனைவிகளுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.இதில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்டு வாராகி அம்மனின் அருளை பெற்றனர். இதனைத் தொடர்ந்து வாராகி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம், அரிசி மாவு அபிஷேகம், காய்கறி அபிஷேகம், தேன் அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News