தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம்
- கடந்த 13-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்ததது..
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
நவராத்திரி பெருவி ழாவை முன்னிட்டு கடந்த மாதம் 13ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வந்ததது.
நிகழ்ச்சி நாளில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான மகாசண்டி யாகம் நடைபெற்றது.
இதில் கோ பூஜை, சுகாசினி பூஜை,வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியார் பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து 7அடி அகலம், 7அடி ஆழத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு யாகத்திற்கு பழங்கள், 108 மூலிகைகள் திரவியங்கள் கொண்டு யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து ஸ்ரீ தேவதுர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.