உள்ளூர் செய்திகள்

கட்டிடங்களின் மேல்தளத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது.

அரசு கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

Published On 2022-11-14 10:18 GMT   |   Update On 2022-11-14 10:18 GMT
  • குப்பைகள் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.
  • தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

தற்போது பெய்து வரும் பருவ மழையால் அரசு கட்டிடங்களில் மழைநீர் தேங்கி சேதமடைவதை தடுக்கும் வகையில் ஊராட்சி சார்பில் அரசு கட்டிடங்களில் சுத்தம் செய்யும் பணி நடை பெற்றது.

ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மேல்தளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க கட்டிடங்களின் மேல்தளத்தில் கிடந்த இலை, தழைகளையும், குப்பைகளையும் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.

மேலும் சாலையிலும், தெருக்களிலும் ஆங்காங்கே தேங்கியிருந்த மழை நீரையும் தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News