உள்ளூர் செய்திகள்
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம்
- பெண்கல்விக்காக தனது 12-வது வயதிலேயே போராடி பல இன்னல்களை சந்தித்த மலாலா பிறந்த தினமான ஜூலை 12-ந் தேதியை மலாலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம் கொண்டாடப்பட்டது.
திசையன்விளை:
பெண்கல்விக்காக தனது 12-வது வயதிலேயே போராடி பல இன்னல்களை சந்தித்த மலாலா பிறந்த தினமான ஜூலை 12-ந் தேதியை மலாலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம் கொண்டாடப்பட்டது. 7-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மலாலாவின் பெருமை களைப் குறுநாடகம் மற்றும் உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து வகுப்பு ஆசிரியர் பேசும்போது, கல்வி என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று எனக்கூறி மலாலா பெண்கல்விக்காக போராடி யதை எடுத்துரைத்தார். முதல்வர் பாத்திமா எலிசபெத் கூறுகையில், மலாலா கல்விக்காக செய்த தியாகங்களை எடுத்துக்கூறி மாணவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அரியவாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி கற்றல் வேண்டும் என்றார்.