உள்ளூர் செய்திகள்

விழாவில் 4 பேருக்கு மாமன்னன் ராஜராஜன் விருதினை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.

தஞ்சையில் நடந்த சதய விழாவில் 4 பேருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது

Published On 2023-10-26 10:20 GMT   |   Update On 2023-10-26 10:20 GMT
  • மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்றது.
  • சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெற்றது.

நேற்று மாலை நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கம், மற்றும் சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

சதய விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் மாமன்னன் ராஜராஜன் விருதினை மதுரை செந்தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் தட்சிணாமூர்த்தி, தஞ்சை டாக்டர் செல்வராஜ், முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பழனியப்பன், புலவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேருக்கு விருதுகள் வழங்கபட்டன.

இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, சதய விழாக்குழு துணைத்தலைவர் மேத்தா, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி ஆணையர் கவிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News