கம்பத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி
- கோவில் திருவிழாவில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
- இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டு வருகிறது. நாளை நடைபெற உள்ள இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு போதை விழிப்புணர்வு குறித்த இரு பாலருக்கான மாரத்தான் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
தற்போதைய கால கட்டத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தம்பிரான் கவுண்டர்கள் இளைஞர் அணி சார்பில் முதலாம் ஆண்டு போட்டி இன்று நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியை சுரேஷ் என்ற சுருளிசாமி, நாட்டாமைக்காரர் மற்றும் ஒக்கலிகர் சமுதாய நிர்வாகிகள்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தேனி தெற்கு விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வசந்தன், முன்னாள் கம்பம் நகர சேர்மன் சிவக்குமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.
கம்பம் வ. உ.சி. திடலில் தொடங்கி காமயகவு ண்ட ன்பட்டி, நாராயண த்தேவன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக மீண்டும் கம்பம் வ.உ.சி. திடலில் முடிவுற்றது. சுமார் 13 கி.மீ. தூரம் ஆண்களுக்கும், 5 கி.மீ. தூரம் பெண்களுக்கும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம், சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.