உள்ளூர் செய்திகள்

 பாகலூரில் பக்தி முழக்கங்களுடன் தேரை இழுத்து சென்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

ஓசூர் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2023-03-25 09:45 GMT   |   Update On 2023-03-25 09:45 GMT
  • பக்தர்கள் தேர் மீது உப்பு,மிளகு, வாழைப்பழம் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
  • விழாவை யொட்டி பாகலூரில், பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஓசூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில், 450 ஆண்டுகள் பழமையான, மிகவும் பிரசித்தி பெற்ற கிராமதேவதை ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று தேரோட்டம், விமரிசையாக நடைபெற்றது.

பாகலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் காலத்தில், ஓசூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் வழிபட்டு வந்ததாகவும், பின்பு பாகலூர் கிராமத்திலேயே வழிபட இந்த கிராம தேவதை மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தேர்திருவிழாவை 450 ஆண்டுகளாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு,விழா நிகழ்ச்சிகள் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நேற்று, சிகர நிகழ்ச்சியாக, தேரோட்டம் நடைபெற்றது.

சிறப்பு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து, பக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். மேலும் அப்போது, பக்தர்கள் தேர் மீது உப்பு,மிளகு, வாழைப்பழம் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், பாகலூர், பேரிகை ஓசூர் மற்றும் 84 கிராம பொதுமக்களும் மற்றும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் நடத்தினர். விழாவை யொட்டி பாகலூரில், பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் இரவு பல்லக்கு உற்சவமும், முக்கிய நிகழ்வாக, பச்சை கரகமும் நடைபெறுகிறது.

விழாவில், பாகலூர் ஊராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் தலைவர் முரளிகுமார் பாபு, மற்றும் முக்கிய பிரமுகர்களும், சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News