உள்ளூர் செய்திகள்

கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் மாசி மாத சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.

கோவில்பட்டி அருகே கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் மாசி திருவிழா

Published On 2023-03-11 08:07 GMT   |   Update On 2023-03-11 08:07 GMT
  • தூத்துக்குடி மாவட்டம் கயத்தார்-கடம்பூர் ரோட்டில் பிரசித்தி பெற்ற கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் மாசி கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது.
  • பூஜைகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், குத்தாலிங்கம் வெங்கடேஷ் ஆகியோர் செய்தார்கள்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார்-கடம்பூர் ரோட்டில் பிரசித்தி பெற்ற கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் மாசி கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, சங்கல்பம், கும்பபூஜை, கணபதி ஹோமம், கண்டி கதிர்காம மூர்த்தி மூல மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து உச்சி காலபூஜை இரவு 8 மணிக்கு அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து பால் குடம் தீர்த்த குடம் எடுத்து கயத்தார்-கடம்பூர் ரோட்டில் அமைந்துள்ள ஆலயம் வந்து இரவு 11 மணிக்கு 21 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், குத்தாலிங்கம் வெங்கடேஷ் ஆகியோர் செய்தார்கள்.

இதில் கதிர்காம மூர்த்தி வேல்ராஜ் சுவாமிநாதன் திரவியம், சீனிவாசப் பெருமாள், முத்துக்குமார், விளக்கு பூஜை குழுவினர் மகாலட்சுமி, செல்வலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் குழுவினர் செய்தார்கள்

Tags:    

Similar News