கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் போராட்டம்
- 100 நாள் வேலையை முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலையை வழங்கி சம்பளம் முழுமையாக வழங்கிட வேண்டும்.
- இன்று காலை மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
கடலூர்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 100 நாள் வேலைக்கு காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலையை முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலையை வழங்கி சம்பளம் முழுமையாக வழங்கிட வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். புதிய பட்டாக்களை குடும்ப பெண்கள் பெயரில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷமும் எழுப்பினர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.