உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறை ரெயில் நிலைய மேலாளர் 'சஸ்பெண்டு'

Published On 2023-11-06 09:21 GMT   |   Update On 2023-11-06 09:21 GMT
  • 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடைமேடைக்கு வந்தது.
  • மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

தரங்கம்பாடி:

காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய ரெயில் நிலையமாக மயிலாடுதுறை ரெயில் நிலையம் உள்ளது.

பல ரெயில்களின் முக்கிய வழித்தடமாக இந்த ரெயில் நிலையம் உள்ளது.

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5.55 மணிக்கு மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்

1-வது நடைமேடையில் வரும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் அனைவரும் முதலாவது நடை மேடையில் தங்கள் பொருட்களுடன் கூடி இருந்தனர்.

ஆனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.

இதனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்தி றனாளி பயணிகள் என அனைவரும் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் நிலைய நடை மேம்பால படிகளில் ஏறி மிகுந்த சிரமத்துடன் 2-வது நடைமேடைக்கு சென்றனர்.

சிலர் ரெயில்வே தண்டவா ளத்தில் இறங்கி கடந்து 2-வது நடைமேடையில் நின்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.

இதன் பின் 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடை மேடைக்கு வந்தது.

அப்போது 2-வது நடைமேடைக்கு சிரமத்துடன் தங்கள் உடைமைகளை சுமந்து வந்த பயணிகள் ரெயிலில் ஏற முடியாமல் மீண்டும் 1-வது நடைமேடைக்கு தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்றனர்.

இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

இது குறித்து ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை ரெயில் நிலைய மேலாளர் சுபம் குமாரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

Similar News