திண்டுக்கல்: இயற்கை முறையில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - மேயர் ஆய்வு
- ரூ.22 லட்சத்தில் கோபாலச முத்திரம் கிழக்குக்கரை பகுதியில் இயற்கை முறை யில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை மேயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரை சுத்தப்படுத்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மாநகராட்சி 12-வது வார்டில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்தில் கோபாலச முத்திரம் கிழக்குக்கரை பகுதியில் இயற்கை முறை யில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கல்லறை தோட்டம், கோபால் நகர், ரோமன்மிஸன் தெரு, ஒய்.எம்.ஆர். பட்டி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், வாய்க்கால் வழியாக கோபாலசமுத்திரம் மழைநீர் சேகரிப்பு மையத்திற்கு வந்து சேர்கிறது. இந்த கழிவுநீர் 6 தடுப்பணைகள் அமைத்து சுத்திகரிப்பட உள்ளது. இதற்கு கல் வாழை, யானைக்கால், மஞ்சு, வெட்டி வேர் மற்றும் வடிகட்டி அமைப்பு கட்டப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து கோபாலசமுத்திரம் மழைநீர் சேகரிப்பு மையத்தில் சேகரிக்கும் வகையில் அமைகிறது.
இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை மேயர் இளமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமையவுள்ள சுத்தி கரிப்பு முறை மற்றும் செயல்படும் முறைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். மேலும் விரைவில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர் ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தி னார்.
இந்நிகழ்ச்சியில் மாநக ராட்சி பொறியாளர் சுப்பிர மணி, உதவி பொறியாளர் சாமிநாதன், கவுன்சிலர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.