தஞ்சை தெற்கு வீதியில் கழிவுநீர் சாலையில் ஓடாமல் இருக்க நடவடிக்கை- மேயர் உறுதி
- கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி 17 மற்றும் 23 ஆகிய வார்டுகளில் இன்று மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார்.
அப்போது தெற்கு வீதியில் அவர் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.
கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
அப்போது கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேயர் கூறினார்.
இதையடுத்து தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர்கள் கோபால், சசிகலா அமர்நாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.