கோவிலூரில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டம்
- கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த கூட்டம்.
- விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த வடகாடு கோவிலூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா ரவி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் (வே.பொ) முருகதாஸ், தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கால்நடை மருத்துவர் மகேந்திரன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் திவ்யா, வேளாண்மை அலுவலர் சு.திவ்யா, உதவி விதை அலுவலர்கள் விஜய் கதிரேசன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் தொழில்நுட்ப தகவல்களை தெரிவித்து பேசினர்.
மேலும், இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி மற்றும் பாரத பிரதமரின் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் கதிரவன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டது. விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.