உள்ளூர் செய்திகள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து சாமி வீதியுலா நடந்த போது எடுத்தபடம்.

மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-04-27 08:18 GMT   |   Update On 2023-04-27 08:18 GMT
  • மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.
  • இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடந்தது. இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர், இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News