உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ
- அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
- ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம்:
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் செல்வகுமார் தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் கடந்த 12-ந்தேதி காலை 5.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. மழை நீர் ஒழுகுகிறது. டிஜிட்டல் போர் பிட்டிங் செய்யவில்லை. வழிதட எண், ஊர் பெயர் கையால் எழுதப்பட்டுள்ளது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 20 பஸ்களின் கண்டக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.