மேட்டுப்பாளையம் நகராட்சியில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புளை துண்டிக்கப்போவதாக நகராட்சி எச்சரிக்கை
- வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது
- புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தவும் அறிவுறுத்தல்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் நக ராட்சி அலுவலகத்தை அணுகி இணைப்பை முறைப்படுத்திக்கொள்ளுமாறு மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் இணைப்புகள் நகராட்சி அனுமதி இல்லா மல் இருப்பதாகவும், அதனை கண்டுபிடித்து முறைப்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து சிறப்புக்குழு அமைத்து வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் விரைவில் சேகரிக்கப்பட இருக்கிறது.
குழு ஆய்வின் போது கண்டுபிடிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும். அத்துடன் நகராட்சி விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் யாரேனும் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணங்களை செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.