உள்ளூர் செய்திகள்

காளிப்பட்டி ஏரிக்கு வந்த தண்ணீரை பா.ம.க.வினர் மலர் தூவி வரவேற்றபோது எடுத்தபடம்.

மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் திறக்கப்பட்ட தண்ணீர்

Published On 2022-07-20 08:55 GMT   |   Update On 2022-07-20 08:55 GMT
  • காவிரியாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு ஏரிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.
  • காவிரி நீர் காளிப்பட்டி வந்தடைந்தது பா.ம.க.வினர் மலர்கள் தூவி வரவேற்றனர்.

மேட்டூர்:

மேட்டூரைஅடுத்த திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள உபரி நீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து நேற்று காலை காவிரியாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு ஏரிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடைந்தது.

இதனை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி யினர் மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜ சேகரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கொளத்தூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் துரைராஜ், மேச்சேரி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி, பா.ம.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் துரைராஜ் ,சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News