பூதப்பாண்டியில் நள்ளிரவு 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு வாலிபர் கைது
- கைது செய்யப்பட்ட சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்ட விசாரணையில் சுமன் குடிபோதையில் கண்டக்டரிடம் ஏற்பட்ட தகராறில் பஸ்சை கல்வீசி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
- தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து வடசேரி புத்தேரி இறச்ச குளம் வழியாக காட்டுப்புதூ ருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு அண்ணா பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் ஒன்று காட்டுப்பு தூருக்கு சென்றது. பஸ்ஸில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுமன் (வயது 23) என்பவர் பயணம் செய்தார். அவர் பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் கண்டக்டருக்கும் சுமனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் சுமன் காட்டுப்புதூர் பகுதியில் பஸ்சை விட்டு இறங்கி அவரது சகோதரி வீட்டிற்கு சென்றார். வழக்கமாக பஸ் காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது வழக்கம்.அதேபோல் டிரைவர் கண்டக்டர்கள் இரவு பஸ்ஸை காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி வைத்தி ருந்தனர்.
இதேபோல் காட்டுப்புதூ ருக்கு இயக்கப்படும் மற்றொரு அரசு பஸ்சும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பஸ்ஸில் 2 டிரைவர்களும் கண்டக்டர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
இதையடுத்து டிரைவர் கண்டக்டர்கள் கண்விழித்து பார்த்த போது பஸ்ஸின் கண்ணாடியை சுமன் கல்வீசி உடைத்து கொண்டு இருந்தார். இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைந்தன. உடனே டிரைவர், கண்டக் டர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பஸ் கல்வீசி உடைக்கப் பட்டது குறித்து பூதப் பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். உடைக்கப்பட்ட இரண்டு பஸ்களையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சுமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஊருக்குள் பதுங்கி இருந்த சுமனை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்ட விசாரணையில் சுமன் குடிபோதையில் கண்டக்டரிடம் ஏற்பட்ட தகராறில் பஸ்சை கல்வீசி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.