உள்ளூர் செய்திகள்
வடமதுரை அருகே கிராமங்களில் ஜோராக நடக்கும் கனிமவள கொள்ளை
- திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் அனுமதியின்றி குவாரிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
- அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் அனுமதியின்றி குவாரிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மண் மற்றும் மணல் கொள்ளை கிரானைட் குவாரிகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் கிரானைட் குவாரிகள் அதிக அளவு மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன.
இதனை கனிமவளத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மலைப்பாங்கான பகுதிகளில் குவாரிகள் திருட்டுத்தனமாக நடைபெறுவதால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
எனவே அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.