விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- மினி மராத்தான் போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா பெற்றார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைத்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் போட்டி விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் வைத்து ஆண்களுக்கு 16 கி.மீ., பெண்களுக்கு 10 கி.மீ. என இரண்டு பிரிவாக நடைபெற்றது.
பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகாவும், இரண்டாம் பரிசு ரூ. 14 ஆயிரத்தை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலட்சுமியும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மனோஜ் குமார், இரண்டாம் பரிசு ரூ.14 ஆயிரத்தை அதே பள்ளியை சேர்ந்த முகேஷ், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.