கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
- ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவரங்கம், சிலை கட்டும் பணி தொடங்கியது.
- அமைச்சர் எ.வ.வேலு நினைவரங்க பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கோவில்பட்டி, ஆக.31-
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவரங்கம், சிலை மற்றும் நூலகம் கட்டும் பணி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நினைவரங்க பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், நெல்லை கண்காணிப்பு பொறியாளர் மாதவன், தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் தேவி, உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவி பொறியாளர்கள் சரத்குமார், சந்திரசேகர், கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் சுசிலா, தி.மு.க. நிர்வாகிகள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ரமேஷ், பீட்டர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.