தூத்துக்குடி 4,5-வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்
- முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் சாலைகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ஆய்வின்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் உடன்இருந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4, 5-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணராஜபுரம் மற்றும் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் சாலைகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், வட்ட துணை செயலாளர் சந்தனமாரி, கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்சலின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்