உள்ளூர் செய்திகள்

கால்வாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.




தூத்துக்குடியில் புதிய கால்வாய் அமைக்கும் பணி-அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-19 09:06 GMT   |   Update On 2022-07-19 09:06 GMT
  • ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
  • பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் இன்று காலை தொடங்கப்பட்டது. எட்டயபுரம் சாலை இசக்கியம்மன் கோயில் அருகில் மற்றும் திருச்செந்தூர் சாலை மாணிக்கம் மஹால் முன்பும் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கி கால்வாய் அமைக்கும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் மாநகர நகர அமைப்புக் குழு தலைவர் ராமகிருஷ்ணன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News