உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கம்போடியா, மியான்மர் நாடுகளில் இருந்து 64 தமிழர்கள் மீட்பு- அமைச்சர் மஸ்தான் தகவல்

Published On 2022-11-19 13:38 GMT   |   Update On 2022-11-19 13:38 GMT
  • வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
  • வேலை தேடி சென்று இன்னல்களுக்கு ஆளானவர்களை அரசு மீட்டு வருகிறது.

இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 24-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது;-

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான பணிகளை செய்ய வற்புறுத்தப்படுவதால்தான், அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அந்த அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளோம். அங்கே வேலை தேடி சென்று பல இன்னல்களுக்கு ஆளான அவர்களுக்காக விமான கட்டணம் தொடங்கி அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுவதற்கான விழிப்புணர்வையும் உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News