உள்ளூர் செய்திகள் (District)

தென்னை கள் இறக்குவது தொடர்பாக அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து முடிவு-கோவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

Published On 2023-05-24 09:19 GMT   |   Update On 2023-05-24 09:32 GMT
  • கண்காட்சியில் 25 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
  • சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

வடவள்ளி,

கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது.

கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.கண்காட்சியில் 25 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு, கேழ்வரகு, ராகி, திணை உள்ளிட்ட பயிர் வகைகள், நவதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடப்பெற்று இருந்தன.

இந்த கருத்தரங்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விஞ்ஞானிகள் இளம் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் பேங்கேற்க உள்ளன.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதா னியங்களை கண்டுபி டிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. அதே போல் சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் வேளாண்மைத்துறை சார்பில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிர்செய்யப்பட்டுள்ளது. 2.7 மெட்ரிக் டன் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம்.

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய சிறுதானிய ரகங்கள் உருவாக்கப்பபட உள்ளது.

சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழக அரசு 82 கோடி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களது நிலதத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு தரமான விதைகளையும் கொடுக்கும். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் புதிய பயிற்சி மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது பாராட்டத்தக்கதாகும். இதற்காக இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் முனைவர் சி.சமயமூர்த்தி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News