தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் அமைச்சர் ஆய்வு
- அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளவைகள் குறித்து கலெக்டர் எடுத்து கூறினார்.
- தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு நடத்தினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
நில அளவீட்டு துறை காட்சியறை, கைவினைப் பொருட்கள் காட்சியறை, ராஜாளி பூங்கா உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தார். அவருக்கு அருங்காட்சி யகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து விதமான அம்சங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் எடுத்துக் கூறினார்.
மேலும் அருங்காட்சி யத்தை தினமும் வரும் சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் எண்ணிக்கை குறித்தும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம், தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது சுற்றுலா வளர்ச்சி மேலாண் இயக்குனர் கீதா, துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், அருங்காட்சியக நிர்வாக அலுவலர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.