உள்ளூர் செய்திகள்

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-01-06 10:18 GMT   |   Update On 2023-01-06 10:18 GMT
  • அன்னை சத்யா மைதானத்தில் குழந்தைகள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை.
  • இயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அவரிடம் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மைதானத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து மைதானத்தில் சர்வதேச செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருவதை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

இதையடுத்து இயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார். அப்போது அவர் கால்பந்து மைதானம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் மைதானத்தில் குழந்தைகள் விளையாடும் அரங்கம் அமைக்கப்படும் என்றும், மைதானத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வில் மருத்துவ கல்லூரி பகுதி தி.மு.க. செயலாளர் சதாசிவம், மாநகராட்சி கவுன்சிலர்கள் அண்ணா.பிரகாஷ், சுகந்தா, ஓய்வு பெற்ற மாவட்ட அலுவலர்கள் மோகன், காந்தி, பயிற்சியாளர்கள் பாபு, ரஞ்சித், மகேஷ், நீலவேணி, தி.மு.க. நிர்வாகிகள் சேகர், ரங்கராஜ், எடிசன், இளங்கோ, கார்த்தி, வினோத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News