உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வழங்கினார்.

அரசு பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- எம்.எல்.ஏ வழங்கினார்

Published On 2022-10-29 09:42 GMT   |   Update On 2022-10-29 09:42 GMT
  • மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
  • செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அநாகரீகமாக பதிலளிப்பது கண்டிக்கத்தக்கது.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையில் உள்ள கும்பகோணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர் மதியழகன் முன்னிலை வகித்தார். இதில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.3.29 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கி னார்.

பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

அரசியலில் நாகரீகம் அற்ற போக்கை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணா மலை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். கடலூரில் செய்தியா ளர்களை தரக்குறைவாக அநாகரீ கமாக பொதுவெளியில் பேசி உள்ளார்.

செய்தியாளர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நாகரீகமாக பதில் அளிக்காமல் அநாகரீகமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவை அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கூடிய விரைவில் அண்ணா மலைக்கும் பா.ஜ.க.வுக்கும் உரிய பதிலடி மக்கள் கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ். கே. முத்துச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் பாதுஷா, மாவட்ட நிர்வாகிகள் ஹிபாயதுல்லா, மைதீன், அப்துல் ரஹ்மான், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News