தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனம்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார்.
- மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கான வாகனத்தை வழங்கி இருந்தார்.
தென்காசி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் மூலம் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி தசை பயிற்சி அளித்தல், செயல் திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு,விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கான வாகனத்தை வழங்கி இருந்தார்.
அந்த வகையில் தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் கலெக்டர் ஆகாஷ் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.