உள்ளூர் செய்திகள்
யானைகள் உயிரிழப்பை தடுக்க மின் மாற்றிகளில் நவீன கருவி
கூடலூரில் சோதனை செய்யும் பணி தொடங்கியது.
ஊட்டி,
வனப் பகுதியை ஒட்டி கூடலூா் அமைந்துள்ளதால் அவ்வப்போது மின்சாரம் பாய்ந்து காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க மாவட்டத்தில் முதல் முறையாக கூடலூா், தொரப்பள்ளி பகுதியில் ஒரு மின்மாற்றியைத் தோ்வு செய்து அங்கு நவீன கருவியை மின்வாரியத்தினா் பொருத்தியுள்ளனா்.
இந்தக் கருவியில் உள்ள சா்க்யூட் பிரேக்கா் என்ற சிஸ்டம் காட்டு யானைகள் உரசியவுடன் தானாக மின்சாரத்தை துண்டித்துவிடும். அதனால் யானைகளின் உயிரிழப்புத் தடுக்கப்படும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.
முதுமலை புலிகள் காப்பக வன எல்லையில் தொரப்பள்ளி அமைந்துள்ளதால் அங்கு இந்தக் கருவியைப் பொருத்தி சோதனை முயற்சியில் மின்வாரியத்தினா் ஈடுபட்டுள்ளனா்.