உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன நடைமேடை.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக நவீன நடைமேடை

Published On 2023-03-06 07:11 GMT   |   Update On 2023-03-06 07:11 GMT
  • மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ரூ.90 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • ஏரியில் சுமார் 14 அடி அகலமும் 460 அடி நீளமும் கொண்ட நவீன நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ரூ.90 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் நகர மன்றத்தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் ஆகியோரது முயற்சியின் அடிப்படையில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரியில் சுமார் ரூ.24 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே நகராட்சியால் நடத்தப்பட்டு வரும் படகு இல்லத்திற்கு 75 புதிய படகுகள் வாங்கப்பட உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் சென்று ஏறுவதற்காக நவீன முறையில் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி சுமார் 14 அடி அகலமும் 460 அடி நீளமும் கொண்ட நடைமேடை அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் நடந்து கொண்டே சுற்றுலா பயணிகள் படகில் ஏறவும், நட்சத்திர ஏரியை கண்டுகளி்க்கவும் முடியும். சுமார் 500 மீட்டர் தூரம் ஏரியில் நடந்து செல்வ தற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சியின் இந்த முயற்சி பல்வேறு தரப்பினர் இடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.

அத்துடன் நகரில் உள்ள பொதுமக்கள் இந்த நடைமேடை அமைப்பதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் ஏரியை சுற்றி பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. அத்துடன் இரவு நேரத்திலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்காக பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் இரவு நேரத்திலும் படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News