நெல்லை மாநகர பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்- வீடு வீடாக ஆய்வு
- மேலப்பாளையம் மண்டலத்தில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள ஆய்வு செய்யப்படுகிறது
- தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
நெல்லை:
நெல்லையில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல்மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின்பேரில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) காளிமுத்து அறிவுறுத்தலின்படி மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரச குமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
அப்போது சுற்றுப்புறங் களில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி அகற்றினர்.
மேலும், பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி னார்கள். புதிய கட்டிடங் களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகை யில் பராமரித்து கொள்ள வும் அறிவுரையும் வழங்கப்பட்டது.